ஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார்

இன்றையதினம் 04.10.2020 அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த சைவ பௌத்த நல்லினக்கத்திற்கான பிரதிநிதி சுவாமி ராகுல தேரர் அவர்கள் சபாபதிப்பிள்ளை வீதி சுண்ணாகத்தில் கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அத்தியாவசிய தேவைகளான வீடு,மலசலகூடம்,தண்ணீர், மின்சாரம் எதுவுமின்றி வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றினை பார்வையிட்டடு அவர்களது நிலைப்பாட்டினை பற்றிய பதிவொன்றினை வெளியிட்டமையை உற்று நோக்கிய அச்சுவேலியை சேர்ந்தவரும் தற்போது ஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார் நிமால் அவர்களுக்கு அக்குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.