நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு; தாக்குதல்தாரி கைது – ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவரா?

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், இதற்கு காரணமான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில் சிலருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளது.
37 வயதான கோக்மென் டானிஸ் என்ற அந்த துருக்கி நாட்டு நபர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கட்டடத்தில் சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரியின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *