முடிந்தது நாய் ஆண்டு… பிறக்கும் பன்றி ஆண்டு…! கோலாகலமாக வரவேற்கும் சீன மக்கள்

சீனாவில் இன்று புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் புத்தாண்டை சீனர்கள் ‘பன்றி ஆண்டு’ என அழைக்கின்றனர்.
‘நாய் ஆண்டு’ நிறைவடைந்து பன்றி ஆண்டு தொடங்குவதையடுத்து சீனாவில் இன்று முதல் ஒரு வார காலத்துக்குப் புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங் முதற்கொண்டு அத்தனை நகரங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்தப் புத்தாண்டை அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடவே சீனர்கள் விரும்புவர். குடும்பத்துடன் நேரம் செலவழித்துக் கொண்டாடும் விழாவாக சீனப் புத்தாண்டு உள்ளது.
சீனாவின் முக்கிய விழாவே இந்தப் புத்தாண்டுதான். வசந்த காலம் கொண்டாட்டம் என்றும் இந்தப் புத்தாண்டு சீனாவில் அழைக்கப்படுகிறது. நகரங்களைவிட்டு லட்சக்கணக்கான சீனர்கள் வெளியேறி வருகின்றனர். அரசு விடுமுறையாகவே ஒரு வார காலம் அளிக்கப்பட்டுள்ளதால் கொண்டாட்டம் கோலாகலமாகி வருகிறது.
சீனக் காலண்டரின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுழற்சி இருக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மிருகம் சின்னமாக இருக்கும். எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மறிஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆண்டுகள் உள்ளன.

Geef een reactie

Het e-mailadres wordt niet gepubliceerd. Vereiste velden zijn gemarkeerd met *